கார்

ரூ. 10 லட்சம் துவக்க விலை.. நெக்சான் புது வேரியண்ட்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

Published On 2024-03-26 14:26 GMT   |   Update On 2024-03-26 14:26 GMT
  • இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்சான். நெக்சான் மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அதிகளவு மாற்றங்களுடன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களை நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் வேரியண்ட்களை மாற்றியமைத்து புதிதாக ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

 


டாடா நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 10 லட்சம் என்று துவங்குகிறது. நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் AMT வெர்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டாடா நிறுவனம் நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

பெட்ரோல் வெர்ஷன்களில் நெக்சான் ஸ்மார்ட் பிளஸ், பியூர், பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டீசல் வெர்ஷனில் பியூர் மற்றும் பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்குவது தவிர டாடா நெக்சான் மாடல்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் ணற்றும் 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCA டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News