கார்

ஆஃபர் அறிவிப்பதிலும் டாடா அசத்தல்.. நெக்சான் EV காருக்கு ரூ. 3.15 லட்சம் வரை தள்ளுபடி

Published On 2024-03-08 09:26 GMT   |   Update On 2024-03-08 09:26 GMT
  • புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகளை அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த சலுகைகள் எதுவும் பன்ச் EV மாடலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் 2023 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மற்றும் 2024 புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

2023 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடல்களுக்கு டாடா உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

நெக்சான் EV பிரைம் மாடலில் 129 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 143 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்சான் EV மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிரீன் போனஸ், 2024 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கிரீன் போனஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர ரொக்க தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்திய சந்தையில் நெக்சான் EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மீடியம் ரேன்ஜ் வேரியண்டை இந்த சார்ஜர் 4.3 மணி நேரத்தில் 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். லாங் ரேன்ஜ் வேரியண்டில் இது 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடும்.

Tags:    

Similar News