453கிமீ ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மேக்ஸ் டார்க் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 04 ஆயிரம், என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் XZ+ மற்றும் 7.2 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் கொண்ட XZ+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் XZ+ லக்ஸ் விலை ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய நெக்சான் நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதில் 16 இன்ச் சார்கோல் கிரே நிற அலாய் வீல்கள், சாடின் பிளாக் ஹியுமனிட்டி லைன், முன்புற ஃபெண்டர்களில் #Dark பேட்ஜிங் உள்ளது. இத்துடன் டிரை-ஏரோ டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிரை ஏரோ எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன.
காரின் உள்புறம் டார்க் தீம் செய்யப்பட்ட இண்டீரியர் உள்ளது. இத்துடன் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய EV டிஸ்ப்ளே தீம், வாய்ஸ் அசிஸ்டண்ட், EPB மற்றும் ஆட்டோ ஹோல்டு அம்சம், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் பியூரிஃபையர் போன்ற வசதிகள் உள்ளன.
புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் டார்க் எடிஷன் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏசி மோட்டார் உள்ளது. இவை 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 453 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்ஷன் கண்ட்ரோல், ரோல்-ஒவர் மிடிகேஷன், HSA, HDC, ESP, பிரேக் டிஸ்க் வைப்பிங், நான்கு டிஸ்க் பிரேக்குகள், பேனிக் பிரேக் அலர்ட், TPMS உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.