கார்

இந்தியாவில் ஜெட் எடிஷன் நெக்சான் EV விற்பனை நிறுத்தம்

Published On 2023-03-01 15:22 IST   |   Update On 2023-03-01 15:22:00 IST
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV எலெக்ட்ரிக் கார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் வெர்ஷன்களில் ஜெட் எடிஷன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நெக்சான் EV ஜெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிரைம் மற்றும் மேக்ஸ் என நெக்சான் EV இரண்டு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு வந்தது. இந்திய சந்தையில் நெக்சான் EV ஜெட் எடிஷன் விலை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது நெக்சான் EV ஜெட் எடிஷன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டார்லைட் நிறத்தில் கிடைத்தது. இதன் பாடி நிறம் எர்தி பிரான்ஸ் நிறமும் ரூஃப் பிளாட்டினம் சில்வர் என டூ-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 16 இன்ச் அலாய் வீல்கள், ORVMகள், முன்புற கிரில், விண்டோ லைன், ரூஃப் ரெயில்களில் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள் செய்யப்பட்டு இருந்தது.

வெளிப்புறம் மட்டுமின்றி காரின் இண்டீரியரும் மாற்றப்பட்டு இருந்தது. இதன் டேஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் பிரான்ஸ் நிற இன்சர்ட்கள் செய்யப்பட்டன. இதன் சீட்களில் ஆயிஸ்டர் வைட் மற்றும் பிரான்ஸ் நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருந்தது. முன்புற இருக்கை ஹெட்ரெஸ்ட்களில் ஜெட் லோகோ இடம்பெற்று இருந்தது.

நெக்சான் EV பிரைம் ஜெட் எடிஷன் மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இது 127 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இது 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News