கார்

டாடா அல்ட்ரோஸ் EV இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2024-01-18 11:02 GMT   |   Update On 2024-01-18 11:02 GMT
  • இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
  • பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் EV கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் 2025 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அல்ட்ரோஸ் EV மாடலின் இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட அல்ட்ரோஸ் EV மாடல் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நெக்சான், டியாகோ, டிகோர் மற்றும் பன்ச் உள்ளிட்ட மாடல்களால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார்களின் ஐ.சி. என்ஜின் வேரியன்ட் அதிக பிரபலமாக இருந்ததே இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

டிசைன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், அல்ட்ரோஸ் மாடல் பெற்றிருக்கும் மிக சமீபத்திய அப்டேட்கள் அனைத்தும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரிலும் பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்களே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு இந்திய சந்தையில் வேறு எந்த மாடலும் போட்டிக்கு இல்லை.

எதிர்காலத்தில் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் விலை அடிப்படையில் டாடா அல்ட்ரோஸ் EV மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

Tags:    

Similar News