கார்

டாடா அல்ட்ரோஸ், பன்ச் CNG இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2023-02-03 09:04 GMT   |   Update On 2023-02-03 09:04 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
  • டாடா அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் மாடல்களில் டுவின் சிலிண்டர் செட்டப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, கர்வ் ICE, அல்ட்ரோஸ் ரேசர் மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தது. இத்துடன் பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்களையும் காட்சிக்கு வைத்தது. தற்போது டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.

டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் iCNG வெர்ஷன்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக CNG திறன் 60 லிட்டர்களாக இருக்கும்.

புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மாடலில் ஆறு ஏர்பேக், எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 இன்ச் டூயல் டோன் ஆலாய் வீல்கள், 7 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதர் இருக்கைகள் வழங்கப்படுகிறது.

டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News