100 ஆண்டுகள் நிறைவு... ஃபேண்டம் சீரிஸில் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்
- சென்டனரி பிரைவேட் கலெக்ஷன் பாரம்பரிய பிளாக் அன்ட் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
- இந்த கார் கிரில்லின் மேல் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி 18 காரட் தங்கத்தில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 100 ஆண்டுகளை நிறைவு செய்த "ஃபேண்டம்" பெயரை நினைவுகூரும் வகையில், புதிதாக "ஃபேண்டம் சென்டனரி பிரைவேட் கலெக்ஷன்" வெளியிட்டுள்ளது. இது உலகளவில் வெறும் 25 யூனிட்கள் அடங்கிய லிமிட்டெட் எடிஷன் சீரிஸ் ஆகும். இந்த சிறப்பு மாடலை உருவாக்க 40,000 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய லிமிட்டெட் எடிஷன் சீரிஸ் இதுவரை மேற்கொண்ட 'மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் லட்சியமான பிரைவேட் கலெக்ஷன்' என்று நிறுவனம் கூறுகிறது.
வெளிப்புறத்தில் தொடங்கி, சென்டனரி பிரைவேட் கலெக்ஷன் பாரம்பரிய பிளாக் அன்ட் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் அதன் சூப்பர் ஷாம்பெயின் கிரிஸ்டல் ஃபினிஷ் என்று அழைக்கும் இந்த நிறம் தனித்துவமானது. இந்த கார் கிரில்லின் மேல் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி 18 காரட் தங்கத்தில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த ஹூட் லோகோ லண்டனில் உள்ள ஹால்மார்க்கிங் & அஸே அலுவலகத்தில் இருந்து 'ஃபேண்டம் சென்டனரி' ஹால்மார்க்கைக் கொண்டுள்ளது என்று ரோல்ஸ் ராய்ஸ் கூறுகிறது. ஹூட் லோகோவின் அடிப்பகுதி எனாமல் பூசப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தை முழுமையாக்குவது ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜ்கள், இது முதல் முறையாக 24 காரட் தங்கம் மற்றும் வெள்ளை எனாமல், தனித்துவமான 'ஃபேண்டம்' சக்கரங்களுடன் முடிக்கப்பட்டுள்ளது.
கேபினை பொருத்தவரை, உட்புறம் கடந்த கால ஃபேண்டம் மாடல்களில் இருந்து உத்வேகத்தைப் பெறுவதோடு, நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. பின்புற இருக்கைகள் 1926 ஆம் ஆண்டின் 'ஃபேண்டம் ஆஃப் லவ்' ஆல் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஃபேண்டம் வரலாற்றில் இருந்து இடங்கள் மற்றும் கலைப்பொருட்களை சித்தரிக்கும் இருக்கை அப்ஹோல்ஸ்டரியில் அடுக்கு கலைப்படைப்புகள் உள்ளன.