ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் டெலிவரி அப்டேட் - வெளியான புது தகவல்
- ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
- பாதுகாப்பிற்காக, காரில் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, முன் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பல உள்ளன.
ரெனால்ட் சமீபத்தில் இந்திய சந்தையில் டிரைபர் ஃபேஸ்லிஃப்டை ரூ.6.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த MPV புதுப்பிப்பைப் பெறுவது இதுவே முதல் முறை. மேலும் இது இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலை MPV ஆகக் கருதப்படுகிறது.
ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் டெலிவரி குறித்த நற்செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில், புதிய மாடல் தற்போது டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளன.
ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் மறுசீரமைக்கப்பட்ட CNG எஞ்சின் ஆப்ஷன்களையும் பெறுகிறது.
ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது முற்றிலும் புதிய வடிவமைப்புடன் வருகிறது. அதே யூனிட்டில் LED DRLகளுடன் ஹெட்லைட்களுக்கான புதிய வடிவமைப்பின் வடிவத்தில் புதிய கூறுகள் தெரியும் வகையில் புதிய முன்பக்கத் தோற்றத்தைப் பெறுகிறது.
புதிய ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் பிளாக் மற்றும் கிரே நிற சீட் கவர்களுடன், புதுப்பிக்கப்பட்ட டேஷ்போர்டு, புதிய லோகோவைக் கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் புதிய அமைப்பைப் பெற்றுள்ளது. இது ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்டின் பிற அம்சங்களில் க்ரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோ வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஃபோல்ட் ORVMகள் மற்றும் பல அடங்கும். பாதுகாப்பிற்காக, காரில் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, முன் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பல உள்ளன.