கார்

ஹூண்டாய் வெர்னா Next-gen மாடல் வெளியீட்டு விவரம்

Published On 2023-02-08 07:18 GMT   |   Update On 2023-02-08 07:18 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய வெர்னா மாடல் பெட்ரோல் என்ஜின், ADAS தொழில்நுட்பம், டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலின் உற்பத்தி பணிகள் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் பெரும்பாலான யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் வெர்னா யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1600 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு 70 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான யூனிட்கள் ஏற்றுமதிக்காகவே பயன்படுத்தப்படும். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக உதிரிபாகங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் வெர்னா மாடல் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தியது. தற்போதைய வெர்னா மாடல் ரஷ்ய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

எனினும், அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் உற்பத்தியை இந்திய ஆலைகளுக்கு மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு புதிய தலைமுறை வெர்னா மாடல் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News