கார்

2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த வால்வோ எலெக்ட்ரிக் கார்

Published On 2022-07-28 09:58 GMT   |   Update On 2022-07-28 09:58 GMT
  • இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த காருக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வால்வோ கார் இந்தியா நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடல் 2022 ஆண்டுக்கு முழுமையாக விற்றுத் தீர்ந்தது என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 150 யூனிட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், விற்பனை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக வால்வோ நிறுவனம் அறிவித்து உள்ளது. யூனிட்கள் விற்றுத் தீர்ந்த போதும், இந்த காருக்கான முன்பதிவுகள் தொடரும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்வோ XC40 ரிசார்ஜ் முதல் யூனிட் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரிசார்ஜ் இருக்கிறது. இந்த மாடல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.

Tags:    

Similar News