கார்

வேற லெவல் அப்டேட்டகள்... மஹிந்திரா தார் பேஸ்லிப்ட் மாடல்..!

Published On 2025-10-08 14:51 IST   |   Update On 2025-10-08 14:51:00 IST
  • தார் பேஸ்லிப்ட் முழுமையாக கருப்பு நிற கேபினை கொண்டுள்ளது.
  • இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் மஹிந்திரா தார் 3 கதவு காரில், பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் ஓட்டுநர் வசதி அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய பாடி கலர் கிரில், மேம்படுத்தப்பட்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை புதிய 3 கதவு தாரின் குறிப்பிடத்தக்க சிறப்புகளாகும்.

மஹிந்திரா நிறுவனம் தாரின் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. மேட் பிளாக் மற்றும் சில்வர் அம்சங்களுடன் கூடிய டூயல்-டோன் பம்பர், புதுமையான முன்பக்க கிரில், 18 இன்ச் அலாய் வீல்கள் இவற்றுடன் பின்புறத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வைப்பர் மற்றும் டி-ஃபாகர் போன்ற அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறங்களாக டாங்கோ ரெட் மற்றும் கிரே ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

உட்புறத்தைப் பொறுத்தவரை, தார் பேஸ்லிப்ட் முழுமையாக கருப்பு நிற கேபினை கொண்டுள்ளது. 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் லாப் டைமர், ஆஃப்-ரோடு விவரங்கள் மற்றும் அடாப்டிவ் ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதனுடன், புதிய அப்ஹோல்ஸ்டரி, ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய முன்பக்க ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கதவுகளில் பவர் விண்டோ கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் பவர் மூலமாக எரிபொருள் மூடியை திறக்கும் வசதி போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய தார் பேஸ்லிப்ட், 2.2 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என அதே என்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. ஸ்டீயரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை புதிய தார் பேஸ்லிப்ட்டின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், இ.பி.டி. உடன் ஏ.பி.எஸ்., எலெட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற டிஃபாகர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் பல வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.9.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News