கார்

ரூ. 7 லட்சம் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் கார் - எம்ஜி கொமெட் EV இந்திய முன்பதிவு துவக்கம்!

Published On 2023-05-15 11:16 GMT   |   Update On 2023-05-15 11:16 GMT
  • எம்ஜி கொமெட் EV மாடல்: பேஸ், பிளே மற்றும் பிளஷ் என மூன்றுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • எம்ஜி கொமெட் EV மாடலில் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கொமெட் EV எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எம்ஜி கொமெட் EV முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். எம்ஜி கொமெட் எலெக்ட்ரிக் கார் விலை விவரங்கள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி எம்ஜி கொமெட் EV விலை ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

இந்தியாவில் எம்ஜி கொமெட் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கி, படிப்படியாக நடைபெறும். எம்ஜி கொமெட் EV மாடல்: பேஸ், பிளே மற்றும் பிளஷ் என மூன்றுவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல்: கேண்டி வைட், அரோரா சில்வர், ஸ்டேரி பிளாக், கேண்டி வைட் மற்றும் ஸ்டேரி பிளாக் ரூஃப், ஆப்பிள் கிரீன் மற்றும் ஸ்டாரி பிளாக் ரூஃப் என்று ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

 

எம்ஜி கொமெட் EV மாடலில் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

இந்த காரை 3.3 கிலோவாட் சார்ஜர் மூலம் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்கள் ஆகும். அம்சங்களை பொருத்தவரை எம்ஜி கொமெட் EV மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 12 இன்ச் ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்கள், அலங்கரிக்கப்பட்ட எம்ஜி லோகோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, i ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், OTA அப்டேட்கள், TPMS, ரிவர்ஸ் பார்கிங் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News