கார்

எலெக்ட்ரிக் மாடல்களுக்கு மெர்சிடிஸ்-இன் அசத்தல் அறிவிப்பு.. இப்படியும் ஆஃபர் கொடுக்கலாமா?

Published On 2023-10-14 09:17 GMT   |   Update On 2023-10-14 09:17 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான பலன்களை வழங்கி வருகிறது. இந்த சலுகை ஏற்கனவே உள்ள மெர்சிடிஸ் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை எப்போது வரை வழங்கப்படும் என்பது பற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

சஸ்டெயினபிலிட்டி ஃபெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் கீழ் EQB, EQS, EQE அல்லது EQS போன்ற மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு சாலை வரியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி வசூலிக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும்.

அக்டோபர் மாத விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை இதுவரையில் மட்டும் வருடாந்திர அடிப்படையில் 11 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. செப்டம்பர் 2023 வரையில் மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 11 ஆயிரத்து 469 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் மொத்த விற்பனையில் பெரும்பாலான யூனிட்கள் டாப் எண்ட் வாகனங்கள் பிரிவை சேர்ந்தவை ஆகும். இதில் மேபேக், AMG மற்றும் EQS சீரிஸ் மாடல்கள் அடங்கும்.

Tags:    

Similar News