கார்

இந்திய விற்பனையில் 30 லட்சம் யூனிட்களை எட்டிய வேகன் ஆர்

Update: 2023-05-16 13:08 GMT
  • வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் ஹேச்பேக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 1999 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல் விற்பனையில் 30 லட்சம் யூனிட்களை கடந்து, புதிய மைல்கல் எட்டியுள்ளது.

இந்திய சந்தையில் வேகன்ஆர் மாடலின் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை கட்டத்தில் உள்ள வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

மாருதி வேகன்ஆர் மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்று இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மாருதி சுசுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக என்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் விளங்குகிறது. இதுதவிர மாருதி வேகன்ஆர் ஹேச்பேக் மாடலின் ஃபிலெக்ஸ் ஃபியூவல் ப்ரோடோடைப் வெர்ஷனை மாருதி சுசுகி நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கிறது. இது காரின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News