கார்

அந்த கார்களின் விற்பனை நிறுத்தப்படலாம் - ஷாக் கொடுக்கும் மாருதி சுசுகி

Published On 2022-06-29 05:23 GMT   |   Update On 2022-06-29 05:23 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் தனது மாடல்களின் எண்ணிக்கையை குறைக்கும் சூழல் ஏற்படலாம் என தெரிவித்து இருக்கிறது.
  • இதற்கான காரணம் பற்றியும் புது தகவல் வெளியாகி உள்ளது.

அரசு திட்டங்கள் காரணமாக சிறிய கார்கள் பயனற்று போகும் பட்சத்தில் அவற்றின் விற்பனை நிறுத்தப்படும் என மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற விதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.


இது போன்ற திட்டங்கள் சிறு கார்களை பயனற்று போகச் செய்யும் பட்சத்தில் அவற்றின் விற்பனையை மாருதி சுசுகி நிறுத்தி விடும். இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என கூறப்பட்டது. எனினும், மாருதி சுசுகி நிறுவன லாபம் சிறிய கார்களின் விற்பனையை சார்ந்து இருக்கவில்லை என தெரிவித்தார்.

"எங்களின் லாபம் சிறிய கார்களை நம்பி இருக்கவில்லை. மக்கள் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளனர். நாங்கள் ஆல்டோ போன்ற மாடல்களை லாபம் இன்றி தான் விற்பனை செய்கிறோம். கார் சந்தையில் இருந்து சிறிய கார்கள் மறையும் பட்சத்தில் இந்த துறை வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும்," என ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். 

Tags:    

Similar News