கார்

85% வரை தாங்கும்... வேற லெவல் Fronx மாடலை அறிமுகம் செய்த மாருதி சுசுகி

Published On 2025-11-06 15:07 IST   |   Update On 2025-11-06 15:07:00 IST
  • ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
  • புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், Fronx Flex Fuel கான்சப்ட் காரை சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது.

இந்தியச் சந்தையில் உள்ள Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fronx காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது.

இந்த யூனிட் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News