கார்

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2022-09-23 11:35 GMT   |   Update On 2022-09-23 11:35 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.
  • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய கிராண்ட் விட்டாரா மாடல் மொத்தத்தில் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் நான்கு வேரியண்ட்கள் ஸ்டாண்டர்டு பெட்ரோல், இரு வேரியண்ட் ஸ்டிராங் ஹைப்ரிட் வடிவில் இடம்பெற்றுள்ளன. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடலுடன் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது. இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் முன்புற டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது.

இதன் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் வேரியண்ட் 1.5 லிட்டர் K15 டூயல்ஜெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் AC சின்க்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த செட்டப் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News