கார்

விற்பனையகம் வந்தடைந்த பலேனோ பிளாக் எடிஷன்

Update: 2023-03-28 11:37 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிளாக் எடிஷன் மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
  • புதிய பிளாக் எடிஷன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்சா பிராண்டு பிளாக் எடிஷன் மாடல்களை இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பிளாக் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா போன்ற மாடல்கள் பியல் மிட்நைட் பிளாக் நிறம் கொண்டிருந்த நிலையில், தற்போது பலேனோ மாடலும் இதே நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

விற்பனையகம் ஒன்றில் பலேனோ பிளாக் எடிஷன் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிரீமியம் ஹேச்பேக் பலேனோ மாடலின் பிளாக் எடிஷன் சீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கின்றன. இந்த காரின் வெளிப்புறம் பியல் மிட்நைட் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன.

 

இத்துடன் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், விண்டோ சில், டோர் ஹேண்டில் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் க்ரோம் எலிமண்ட்கள் உள்ளன. அம்சங்களை பொருத்தவரை பலேனோ ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ள அனைத்து அம்சங்களும் பிளாக் எடிஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி சுசுகி பலேனோ மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் CNG கிட் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மோடில் இது 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், CNG மோடில் இது 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Photo Courtesy: Anubhav Chauhan

Tags:    

Similar News