கார்

கோப்புப்படம்

டெஸ்டிங்கில் சிக்கிய தார் 5 -door வேரியண்ட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2024-05-22 15:58 GMT   |   Update On 2024-05-22 15:58 GMT
  • புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும்.
  • இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் 5-டோர் வேரியண்ட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய தார் 5-டோர் மாடல் உற்பத்திக்கு தயாரான நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

புகைப்படங்களின் படி புதிய தார் ஐந்து கதவுகள் கொண்ட மாடலில் முற்றிலும் புதிய டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், உள்புறத்தில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய ஸ்பை படங்களின் படி புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது.

 


2024 மஹிந்திரா தார் 5-டோர் மாடலில் முற்றிலும் புதிய கிரில், நீண்ட வீல்பேஸ், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் சன்ரூஃப், ரியர் ஏ.சி. வெண்ட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய தார் மாடலிலும் 2.0 லிட்டர் எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News