கார்

20 மாதங்களில் இத்தனை யூனிட்களா? தொடர்ந்து அசத்தும் மஹிந்திரா XUV700

Published On 2023-07-05 11:15 IST   |   Update On 2023-07-05 11:15:00 IST
  • மஹிந்திரா XUV700 மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • இந்த காரின் முதல் 50 ஆயிரம் யூனிட்கள் 12 மாதங்களில் வினியோகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா நிறுவனம் ஒரு லட்சம் XUV700 யூனிட்களை 20 மாதங்களில் வினியோகம் செய்து இருக்கிறது. இதில் முதல் 50 ஆயிரம் யூனிட்கள் அறிமுகமான 12 மாதங்களில் எட்டியது. அதன்படி கடைசி 50 ஆயிரம் யூனிட்கள் வெறும் எட்டு மாதங்களில் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தனது XUV700 மாடலை ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, XUV700 மாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மஹிந்திரா நிறுவனம் 78 ஆயிரம் யூனிட்களுக்கு முன்பதிவு பெற்று, வினியோகம் செய்ய காத்திருப்பதாக தெரிவித்து இருந்தது. தற்போது இந்த மாடலின் உற்பத்தியை மாதம் 8 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது.

மஹிந்திரா XUV700 மாடல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என்று இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கிறது. இவை முறையே 200 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 185 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் மஹிந்திரா XUV700 மாடலின் 3-ரோ வெர்ஷன் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதே காரின் 2-ரோ வெர்ஷன் டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News