ரூ. 4,344 விலையில் குட்டி சாதனம் அறிமுகப்படுத்திய கியா... எதற்கு தெரியுமா?
- கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
- டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும்.
கியா நிறுவனம் வயர்லெஸ் போன் மிரரிங் அடாப்டர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 344 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது வயர்லெஸ் போன் மிரரிங் கொண்ட அனைத்து கியா மாடல்களிலும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை கியா டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களில் வாங்கி பொருத்தலாம்.
பல்வேறு கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஏனெனில் அதன் டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும். கியா நிறுவனம் ஏற்கனவே அதன் முழுமையான கார்களின் டாப் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜர்களை வழங்குகிறது.
வயர்டு போன் மிரரிங் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் ஹூண்டாய் இதை வழங்கத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆப்ஷன் வருகிறது.