கார்

கேரன்ஸ் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்த கியா... விலை எவ்வளவு தெரியுமா..?

Published On 2025-10-30 14:50 IST   |   Update On 2025-10-30 14:50:00 IST
  • இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
  • இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.

கியா இந்தியா நிறுவனம், கேரன்ஸ் சீரிசில் CNG வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 11.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டீலர் தரப்பில் ஃபிட்டிங் செய்து தரப்படும் கேரன்ஸ் CNG பிரீமியம் (O) வேரியண்டின் விலையை விட ரூ. 77,900 அதிகம் ஆகும். இதன் விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கேரன்ஸ் மாடலில் உள்ள CNG கிட் அரசு அனுமதி பெற்று லோவாடோ வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் மூன்றாம் தரப்பு உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 113bhp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.



அம்சங்களைப் பொறுத்தவரை, கியா கேரன்ஸ் CNG காரில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வழிகாட்டுதல்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12.5-இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆறு ஏர்பேக்குகள், 5 டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், வீல் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் TPMS போன்ற அம்சங்கள் உள்ளன.

Tags:    

Similar News