கார்
null
தமிழகம் முழுக்க பாஸ்ட் சார்ஜிங் மையங்களை அமைக்கும் ஹூண்டாய்
- அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்தலாம்.
- இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது முதல் 180 கிலோவாட் டி.சி. பாஸ்ட் சார்ஜிங் மையத்தை திறந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் இந்த சார்ஜிங் மையம் அமைந்துள்ளது. இதில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் டி.சி. திறன் கொண்ட முனைகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இவற்றை ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்த முடியும்.
முன்னதாக மும்பை, பூனே, ஆமதாபாத், ஐதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு என நாடு முழுக்க பத்து இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் திறந்து வைத்தது. இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.