வேற லெவல் அப்டேட்களுடன் i20 புது வேரியண்ட் அறிமுகம் செய்த ஹூண்டாய்
- ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது.
- இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் i20 நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதன் நைட் எடிஷன் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ரூ. 9.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் இந்த சிறப்பு மாடல், i20-யின் பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டு, இருண்ட, ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய i20 நைட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் அஸ்டா (O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில், வெளிப்புற கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் மேட் பிளாக் நிறத்தில் ஹூண்டாய் லோகோ உள்ளிட்ட பல பிளாக்-அவுட் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள், பிரத்யேக நைட் லோகோ மற்றும் ஸ்போர்ட் மெட்டல் பெடல்களை கொண்டுள்ளது. உள்புறம் கேபினில் பிரான்ஸ் இன்சர்ட்களுடன் ஃபுல் பிளாக் தீம் மற்றும் பிரான்ஸ் சிறப்பம்சங்களுடன் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது. அதன்படி N8 மற்றும் N10 வேரிண்ட்களில் கிடைக்கும், i20 N லைன் நைட் எடிஷனின் விலை ரூ. 11.43 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
தோற்றம் தவிர்த்து மெக்கானிக்கல் அம்சங்களில், இரண்டு மாடல்களும் மாறாமல் உள்ளன. i20 அதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, i20 N லைன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாயின் ஹேட்ச்பேக் வரிசையில் உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் N லைன் மாடல்களுடன் i20 நைட் மாடல் இடம்பெறும்.