கார்

ADAS வசதியுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்சான்... விலை தான் ஹைலைட்டே..!

Published On 2025-10-17 14:53 IST   |   Update On 2025-10-17 14:53:00 IST
  • என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் நெக்சான் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் மாடலில் ADAS வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் ஃபியர்லெஸ்+ PS DCT/DCA வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.13.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது நெக்சான் EV உடன் வழங்கப்படும் அதே ADAS வசதிகளுடன் வருகிறது.

ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் (FCW)

ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB)

லேன் டிபார்ச்சர் வார்னிங் (LDW)

லேன் சென்டரிங் சிஸ்டம் (LCS)

லேன் கீப் அசிஸ்ட் (LKA)

ஹை பீம் அசிஸ்ட் (HBA)

டிராஃபிக் சைன் அங்கீகாரம் (TSR)

புதிய டாடா நெக்சான் ADAS தொகுப்பில் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.



ஃபியர்லெஸ்+ PS வேரியண்ட் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வென்டிலேட்டெட் முன்பக்க இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கான உயரத்தை சரிசெய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 86bhp பவர் மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய சந்தையில் கிடைக்கும் மஹிந்திரா XUV3XO, கியா சைரோஸ் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் வென்யூ போன்ற கார்கள் அனைத்திலும் லெவல் 2 ADAS வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ADAS இப்போது இந்த பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளது.

Tags:    

Similar News