கார்

257Kmph வேகம், அதிவேக சார்ஜிங் வசதியுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

Published On 2025-07-11 14:54 IST   |   Update On 2025-07-11 14:54:00 IST
  • புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது.
  • கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.

புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக் 6 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இருப்பினும், அந்த நேரத்தில் வரவிருக்கும் N மாறுபாட்டின் விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடலின் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் மாடலை ஹூண்டாய் நிறுவனம் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு" நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

தோற்றத்தின் அடிப்படையில், 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 6 மாடலை போன்ற தோற்றம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புதிய நேர்த்தியான ஹெட்லைட்களும் அடங்கும். இந்த மாடலில் புதிதாக N பேட்ஜுடன், இப்போது அகலமான ஃபெண்டர்கள் மற்றும் ஸ்வான் நெக் பின்புற இறக்கை பெறுகிறது.

புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது. ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலுசேர்க்க, ஃபெண்டர்கள் விரிவடைந்துள்ளன. இவற்றுடன் பெர்ஃபாமன்ஸ் ப்ளூ பேர்ல் ஷேடோ ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐயோனிக் 5 N உடன் அதன் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்ளும் இந்த கார், ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் மற்றும் 601 hp பவர் வெளிப்படுத்துகிறது. இது போதாது என்றால், காரில் N க்ரின் பூஸ்ட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.



இது 84 kWh பேட்டரி பேக்கிலிருந்து அதிக திறனை உறிஞ்சும் அதே வேளையில் 10 வினாடிகளுக்கு 641 hp ஆக வெளியீட்டை அதிகரிக்கிறது. பயன்படுத்தப்படும்போது, இந்த செடான் 3.2 வினாடிகளில் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை அடைகிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

வேகத்தைக் கட்டுப்படுத்த, ஹூண்டாய் ஐயோனிக் 6 N நான்கு-பிஸ்டன் முன் காலிப்பர்களையும், பின்புறத்தில் முறையே 15.7 மற்றும் 14.1-இன்ச் ரோட்டர்களுடன் கூடிய ஒற்றை-பிஸ்டன் யூனிட்டையும் பெறுகிறது.

Tags:    

Similar News