முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ X1 முன்பதிவு துவக்கம்?
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது X சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய X சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பட்ஜெட் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய X1 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க விற்பனை மையங்களில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு நடைபெறுகிறது. புதிய X1 மாடல் பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் 2023 ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ X1 மாடலில் கூர்மையான டிசைன் அம்சங்கள், பெரிய கிட்னி கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் லேம்ப் டிசைன் மாற்றப்பட்டு புதிய X3 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய X1 மாடலில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை 20 இன்ச் வரை அப்கிரேடு செய்து கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
உள்புறத்தில் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, புதிதாக வளைந்த டிஸ்ப்ளே, ஐடிரைவ் 8 ஒஎஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. FAAR ஆர்கிடெக்கசரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் X1 மாடல் இருவித பெட்ரோல், இருவித டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 வோல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இருவித என்ஜின்களுடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.