கார்

2022 டாடா டிகோர் EV இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-11-23 10:01 GMT   |   Update On 2022-11-23 10:01 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய டாடா எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டாடா டிகோர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டிகோர் EV விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 2022 டாடா டிகோர் EV மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் முன்பை விட அதிக ரேன்ஜ் வழங்குகிறது.

2022 டிகோர் EV மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய காரை விட 15 கிலோமீட்டர் வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் தற்போது முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த கார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மேம்பட்ட டாடா டியாகோ EV மாடலில் லெதர் இருக்கை மேற்கவர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் டாடாவின் Z கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே டிகோர் EV XZ மற்றும் XZ+ மாடல்களை பயன்படுத்துவோருக்கு இதற்கான அப்டேட் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.

டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது. இந்த வேரியண்ட் டாடா டிகோர் EV XZ+ வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News