ஆட்டோமொபைல்
வோக்ஸ்வேகன் டைகுன்

கார் மாடல் விலையை உயர்த்திய வோக்ஸ்வேகன்

Published On 2021-11-22 07:21 GMT   |   Update On 2021-11-22 07:21 GMT
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.


வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல்- கம்ஃபர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இவற்றில் கம்ஃபர்ட்லைன் வேரியண்ட் விலை ரூ. 5200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 4300 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்திய சந்தையில் 18 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக வோக்ஸ்வேகன் அறிவித்து இருந்தது. 



இந்தியாவில் புதிய வோக்ஸ்வேகன் காரை பெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 147 பி.ஹெச்.பி. திறன், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
Tags:    

Similar News