ஆட்டோமொபைல்

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் மாருதி எலெக்ட்ரிக் கார்

Published On 2019-02-26 10:04 GMT   |   Update On 2019-02-26 10:04 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இந்த கார் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #WagonRElectric



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மாருதி நிறுவனம் தனது வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2020 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

இந்நிலையில், மாருதியின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் காரில் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்படும் என ஆட்டோகார் இந்தியா வெளியிட்டிருக்கும் என தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் காரின் பேட்டரிகளை 80 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுத்துக் கொள்ளும்.                                           

வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் ஏ.சி. சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். மாருதி வேகன் ஆர் இரண்டு சார்ஜிங் போர்ட்களுடன் வரும் என கூறப்படுகிறது. ஒன்று ஏ.சி. சார்ஜிங் மற்றொன்று டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங்.



சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை சோதனை செய்வதாக அறிவித்தது. இதற்கென 50 ப்ரோடோடைப் கார்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படுகின்றன. இவை அனைத்து வித சூழ்நிலைகளிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இத்துடன் புதிய வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை சார்ந்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி இந்தியாவில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் ரூ.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் அனைத்து சலுகைகளையும் கழித்தே இந்த விலை இருக்கும் என கூறப்படுகிறது.

மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் 72-வோல்ட் சிஸ்டம் மற்றும் 10-25KWh பேட்டரி பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் மாடல்கள் சோலியோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
Tags:    

Similar News