ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக 3 மாடல்கள் விலையை குறைக்கும் ராயல் என்ஃபீல்டு
- மத்திய அரசு இரு சக்கர வாகனங்களுக்கு புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிவித்துள்ளது.
- 350 சிசிக்கு கீழ் உள்ள அனைத்து மாடல்களும் இப்போது 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீத வரி வசூலிக்கப்பட உள்ளன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழு ஜிஎஸ்டி குறைப்பு பலனை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி விலைகள் ஹண்டர் 350, புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் கோவான் கிளாசிக் 350 ஆகியவற்றுக்கு பொருந்தும்.
இருப்பினும், நிறுவனம் புதிய விலைகளை வெளியிடவில்லை, ஆனால் இந்த புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் நடைமுறைக்கு வரும் 22-ந்தேதி அன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு இரு சக்கர வாகனங்களுக்கு புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிவித்துள்ளது. அதன்படி 350 சிசிக்கு கீழ் உள்ள அனைத்து மாடல்களும் இப்போது 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீத வரி வசூலிக்கப்பட உள்ளன.
350cc க்கும் அதிகமான பைக்குகளின் விலை அதிகரிக்கும் என்றும், ஜிஎஸ்டி விகிதங்கள் முந்தைய 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக மூன்று சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ராயல் என்ஃபீல்ட் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, ஹிமாலயன் 450, கெரில்லா 450 மற்றும் முழு 650cc வகை பைக்குகளின் விலையும் கடுமையாக உயரும்.