பைக்

2 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்

Update: 2022-11-19 08:17 GMT
  • விசேஷ அம்சங்களுடன் டிராக் பயன்பாட்டிற்கான 2023 RC 8C லிமிடெட் எடிஷனை கேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது.
  • புதிய 2023 மாடலில் அதிக செயல்திறன் கொண்ட என்ஜின், எடை குறைந்த பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 2023 RC 8C லிமிடெட் எடிஷன் மாடல் விற்பனை துவங்கிய 2 நிமிடம் 38 நொடிகளில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. டிராக் பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்திலேயே 200 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டன.

மிக குறுகிய காலக்கட்டத்திற்குள் விற்பனையாகி போன 200 யூனிட்களில், 30 பேர் தங்களின் 2023 கேடிஎம் RC 8C மாடலை ஸ்பெயின் நாட்டில் உள்ள வலென்சியாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் டெலிவரி எடுத்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளனர். முன்பதிவுகள் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மறு விற்பனைக்காக ஆன்லைன் காத்திருப்போர் பட்டியலை கேடிஎம் உருவாக்கி இருக்கிறது.

2023 கேடிஎம் RC 8C மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இதில் புதிய பெயிண்ட், ஏரோ பேக்கேஜ் ட்வீக், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், எடையை குறைக்கும் புதிய பாகங்கள், உயர் ரக பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ட்வீக் செய்யப்பட்டு அதிக செயல்திறன் வழங்கும் வகையில் ரி-டியூன் செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 2023 கேடிஎம் RC 8C மாடலில் உள்ள என்ஜின் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது முந்தைய மாடலில் இருப்பதை விட 6.9 ஹெச்பி அதிகம் ஆகும். அதிக செயல்திறன் கிடைக்கச் செய்வதற்காக புதிதாக டைட்டானியம் வால்வுகள், கான்ராட்கள், இரு பிஸ்டன் ரிங்குகள், அதிக கம்ப்ரெஷன் ரேஷியோ, பெரிய திராடிள் பாடி, ஃபியூவல் பம்ப் / பிரெஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேப்பிங், என்ஜின் பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராடிள் ரெஸ்பான்ஸ் -ஐ அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காக்பிட்-இல் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ், கேடிஎம் RC16 மாடலில் உள்ளதை போன்ற டிரைவ்டு ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News