பைக்

இந்தியா பைக் வார நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர்

Published On 2022-12-03 08:29 GMT   |   Update On 2022-12-03 08:29 GMT
  • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் WP முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
  • புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியா பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கேடிஎம் நிறுவன மாடல்களுடன் இந்த மோட்டார்சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டது. முழுமையான ஆஃப் ரோடிங் தோற்றம் கொண்டிருக்கிறது.

புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு விண்ட்ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஹேண்டில்பார் கார்டுகள், பெல்லி பேன் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்டீல் டியூப் ஃபிரேம் WP முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் TFT ஸ்கிரீன், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ABS, ரைடு மோட்கள் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புதிய 2023 மாடலில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் இதுவரை இல்லாத அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் இந்திய அறிமுகம் பற்றி கேடிஎம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News