ஸ்போக் வீல்களுடன் விரைவில் அறிமுகமாகும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி?
- கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
- கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது.
கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது 390 அட்வென்ச்சர் மாடலின் புதிய வேரியண்ட்கள்- குறைந்தவிலை X வெர்ஷன் மற்றும் லோ-சீட் V ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது. தற்போது கேடிஎம் நிறுவனம் ஆஃப்-ரோடு சார்ந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் ஸ்போக் வீல் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
சர்வதேச சந்தையை போன்றே கேடிஎம் 390 அட்வென்ச்சர் SW மாடல், புதிய ஆஃப் ரோடு மாடல் 390 அட்வென்ச்சர் ரேலி என்ற பெயரில் தான் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.
இந்த மாடலின் விற்பனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ துவங்கும் என்று தெரிகிறது. புதிய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.