பைக்

கேடிஎம் 250 அட்வென்ச்சர் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்!

Update: 2023-06-02 08:34 GMT
  • கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்தது.
  • புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலிலும் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலின் லோ-சீட்-ஹைட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான், கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்து இருந்தது. தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடலின் சீட் உயரம் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடல் லோ-சீட்-ஹைட் வேரியண்டில் 834 மில்லிமீட்டராக உள்ளது.

இதுதவிர புதிய மாடலின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன.

சஸ்பென்ஷனுக்கு இந்த மாடலில் 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறம் 320mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 230mm சிங்கில் டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் டியுபுலர் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News