பைக்

என்ட்ரி லெவலில் புதிய பைக் அறிமுகம் செய்த கேடிஎம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-08-12 13:14 IST   |   Update On 2025-08-12 13:14:00 IST
  • எஞ்சின் ஒரு ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் மூடப்பட்டிருக்கும்.
  • பைக்கில் 10.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய என்ட்ரி லெவல் டியூக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் யமஹா எம்டி 15 உடன் ஒப்பிடத்தக்கது. கேடிஎம் முழுமையாக ஃபேர் செய்யப்பட்ட பதிப்பான ஆர்சி 160 ஐயும் தயார் செய்துள்ளது, இது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும்.

கேடிஎம் 160 டியூக்: எஞ்சின்

கேடிஎம் 160 டியூக் மாடலில் 164.2-சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட்-கூல்டு, SOHC எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 9,500 rpm இல் 19 ஹெச்பி பவர், 7,500 rpm இல் 15.5 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.

கேடிஎம் 160 டியூக்: ஹார்டுவேர்

கேடிஎம் 160 டியூக் பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் WP அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ-லிங்கேஜ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரெம்போ டூயல்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் 230 மிமீ பின்புற டிஸ்க்குடன் வருகிறது.

எஞ்சின் ஒரு ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் மூடப்பட்டிருக்கும். இத்துடன் முழுமையாக எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1,357 மிமீ ஆகும். இந்த பைக்கில் 10.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 160 டியூக்: அம்சங்கள்

புதிய கேடிஎம் 160 டியூக்- எலெக்டிரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் புளூ மற்றும் சில்வர் மெட்டாலிக் மேட் என மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இத்துடன் 5-இன்ச் எல்சிடி கன்சோல் மொபைல் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் வசதியை ஆதரிக்கிறது.

இந்திய சந்தையில் கேடிஎம் 160 டியூக், டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் யமஹா எம்டி 15 போன்ற பிற மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக உள்ளது. புதிய கேடிஎம் 160 டியூக் மாடலின் விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News