பைக்

இந்தியாவில் அறிமுகம் செய்ய புதிதாக 300 சிசி அட்வென்ச்சர் பைக் உருவாக்கும் ஹோண்டா?

Published On 2023-03-25 12:11 GMT   |   Update On 2023-03-25 12:11 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 300சிசி பைக் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
  • புதிய ஹோண்டா 300சிசி மாடல் அட்வென்ச்சர் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் CB200X மாடலை அறிமுகம் செய்தது. இது ஹார்னெட் 2.0 நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட அட்வென்ச்சர் ஸ்டைல் மாடல் ஆகும்.

அட்வென்சசர் பைக் என்ற போதிலும், இதில் நீண்ட சஸ்பென்ஷன் அல்லது பெரிய முன்புற வீல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதோடு கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாகவே இருந்தது. புதிய மாடலில் இது போன்ற வழிகளை தவிர்த்து புதிய மாடலுக்கு ஏற்ற அப்டேட்களை ஹோண்டா நிறுவனம் வழங்கும் என தெரிகிறது.

 

புதிய அட்வென்ச்சர் மாடலில் ஹோண்டா நிறுவனம் 293சிசி, ஏர்-ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படலாம். இந்த எஞ்சின் 24.47 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB300F மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலின் பின்புறம் ஒற்றை ஷாக், யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. புதிய 300சிசி மோட்டார்சைக்கிளில் பெரிய முன்புற வீல், நீட்டிக்கப்பட்ட சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் வயர் ஸ்போக் ரிம்கள் வழங்கப்படலாம்.

Tags:    

Similar News