கேஷ்பேக் சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கும் ஹோண்டா ஷைன்
- ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் மாடலுக்கு அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- ஷைன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் கம்யுட்டர் மாடலுக்கு குறுகிய கால சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது. மேலும் ஹோண்டா ஷைன் மாடலுக்கு ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணத்தில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் மாத தவணைக்கு 7.99 சதவீத வட்டி, ஐந்து சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகை குறைந்த பட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள், ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டு மாத தவணை முறைகளுக்கு வழங்கப்படுகிறது. நிதி சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மட்டும் அறிவித்துள்ளன.
ஹோண்டா ஷைன் மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் ஆகும். ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் பிரிவில் ஷைன் மாடல் இரண்டவாது இடத்திலும், அதிகம் விற்பனையான மூன்றாவது இருசக்கர வாகனமாக உள்ளது. இந்தியாவில் 125சிசி பிரிவில் ஹீரோ கிளாமர் மாடலுக்கு இந்த மோட்டார்சைக்கிள் போட்டியாக அமைகிறது.
ஹோண்டா ஷைன் மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.59 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.