பைக்

இந்தியாவில் அறிமுகமான ஹோண்டா ஷைன் 100 - விலை இவ்வளவு தானா?

Update: 2023-03-15 10:19 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் ஷைன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல் CB ஷைன் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 100சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.61 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடல் டியுபுலர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

ஹோண்டா ஷைன் 100 மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், பல்பு இண்டிகேட்டர்கள், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல் ரீட்அவுட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சைடு ஸ்டாண்டு சென்சார், கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக்குகள், அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலின் விலை ரூ. 64 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல் ஹீரோ ஸ்பிலெண்டர், டிவிஎஸ் ரேடியான் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வினியோகம் மே மாதம் துவங்க உள்ளது.

புதிய ஹோண்டா ஷைன் 100 மாடல்- பிளாக் மற்றும் ரெட் ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் புளூ ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கிரீன் ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கோல்டு ஸ்டிரைப்கள், பிளாக் மற்றும் கிரே ஸ்டிரைப்கள் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News