பைக்

மார்ச் மாதம் இந்தியா வரும் புது ஹோண்டா 100சிசி பைக்?

Update: 2023-01-25 09:59 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புது 100சிசி பைக் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
  • புது 100சிசி பைக் ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

ஹோண்டா நிறுவனம் தனது முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிளை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருக்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த மாடலை உருவாக்கும் பணிகள் துவங்கிவிட்ட நிலையில், இது நேரடியாக ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100சிசி பைக் பற்றி தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது.

முன்னதாக 2021 வாக்கில் ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய 100சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அட்சுஷி ஒகாடா தெரிவித்து இருந்தார். தற்போது ஹோண்டா நிறுவனத்தின் ஷைன், SP125 மற்றும் யுனிகான் போன்ற மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடலாக CD 110 இருக்கிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 110சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.7 ஹெச்பி பவர், 9.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

புதிய 100சிசி ஹோண்டா பைக் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் CD110 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. புது 100சிசி பைக் மட்டுமின்றி ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News