பைக்

இந்தியாவில் காப்புரிமை பெற்ற ஹோண்டா ஹாக் 11

Published On 2023-02-04 11:19 GMT   |   Update On 2023-02-04 11:19 GMT
  • ஹாக் 11 மாடலுக்கான காப்புரிமையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது.
  • ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் 1082சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 4 பெரிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் CB500X மாடல் சமீபத்தில் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் பட்டியலிடப்பட்டு தற்போது மற்றொரு முறை ஆஃப்லைனில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று CBR-1000RR-R ஃபயர்பிலேடு மாடல் தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டு விட்டது. இவை தவிர CBR650-R, ஃபயர்பிலேடு, ஆப்ரிக்கா டுவின் மற்றும் கோல்டு விங் போன்ற மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹோண்டா பிங்விங் ஒற்றை பெரிய பைக் மாடலையும் விற்பனை செய்யவில்லை. பெரிய பைக் மாடல்கள் பிரிவில் போட்டி நிறுவனமான கவாசகி, தனது விலை காரணமாக மற்ற நிறுவனங்களை விட அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது. இதுதவிர சுசுகி நிறுவனம் ஹயபுசா மற்றும் கட்டனா சீரிசில் தன்பங்கிற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் புதிய பெரிய பைக் மாடலை இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புது பெரிய பைக் ஆப்ரிக்கா டுவின் போன்றே 1082சிசி பேரலல் டுவின் பிளாட்பார்ம் கொண்ட ஹாக் 11 ஆகும். ஹாக் 11 நியோ ரெட்ரோ-தீம் கொண்ட கஃபே-ரேசர் மோட்டார்சைக்கிள் ஆகும். முன்னதாக 2022 ஒசாகா மோட்டார்சைக்கிள் விழாவில் இந்த கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

இந்திய சந்தையில் புதிய ஹாக் 11 மாடலுக்கான காப்புரிமையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சரியாக நான்காவது மாதத்தில் இந்த காப்புரிமை விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புது ஹோண்டா மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது இந்தியாவுக்காக தயாராகி வருகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை பெற்ற பல மாடல்கள் அறிமுகம் செய்யப்படாமலேயே உள்ளது. அந்த வரிசையில், இந்த மாடலும் இணைந்து கொள்ளலாம் அல்லது சந்தையில் தேவை ஏற்படும் பட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகளும் உண்டு. ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ORVMகள், க்ளிப்-ஆன் ஹேண்டில் பார்கள், முன்புறம் யுஎஸ்டி ஃபோர்க்குகள், முன்புறம் டூயல் டிஸ்க், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் 1082சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Photo Courtesy: Rushlane

Tags:    

Similar News