பைக்

ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-08-04 09:29 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த மாடலின் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இது ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பேஸ் மாடலுடன் ஒப்பிடும் போது டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டிராண்டியம் சில்வர் மெட்டாலிக் - பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் - பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய லிமிடெட் எடிஷன் மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.6 ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடலில் அதே ஸ்போர்ட்ஸ் டிசைன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 130 மில்லிமீட்டர் அளவில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 68 ஆயிரத்து 317 என்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 317 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பேஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 500, ஸ்போர்ட்ஸ் டீலக்ஸ் மாடல் விலை ரூ. 2 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.

Tags:    

Similar News