பைக்

வேற லெவல் அம்சங்கள்.. ராயல் என்பீல்டுக்கு நேரடி போட்டி.. புதிய CB350 அறிமுகம் செய்த ஹோண்டா

Published On 2023-11-17 10:35 GMT   |   Update On 2023-11-17 10:35 GMT
  • ஹோண்டா CB350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
  • புதிய CB350 மாடலிலும் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் CB350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே உள்ள 350சிசி பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

புதிய ஹோண்டா CB350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட் ஃபினிஷ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா CB350 மாடல் பிரெசியஸ் ரெட் மெட்டாலிக், பியல் இக்னியஸ் பிளாக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் மேட் டியூன் பிரவுன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்த வேரியண்ட்கள் அனைத்திலும் பிரவுன் நிற லெதர் சீட், பைக் நிறத்தால் ஆன சீட் கவர் வழங்கப்படுகிறது. புதிய CB350 மாடலிலும் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஸ்பிரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm, பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா CB350 மாடல் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா CB350 மாடல் DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

ஹோண்டா CB350 DLX ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900

ஹோண்டா CB350 DLX ப்ரோ ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 800

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News