பைக்

பைக்கிற்கு ரூ. 56000 விலை குறைப்பு அறிவித்த ஹோண்டா

Published On 2023-09-11 14:02 GMT   |   Update On 2023-09-11 14:02 GMT
  • குறைப்புக்கு என்ன காரணம் என்று ஹோண்டா தெரிவிக்கவில்லை.
  • ஏற்கனவே இதேபோன்ற விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB300F மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 56 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது.

முன்னதாக இந்த மாடலின் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போதைய விலை குறைப்புக்கு என்ன காரணம் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இது மோட்டார்சைக்கிள் விற்பனையை அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

 

முன்னதாக ஹோண்டா நிறுவனம் CB300F மாடல் விலையை ரூ. 50 ஆயிரம் வரை குறைத்து இருந்தது. எனினும், குறுகிய கால சலுகையாகவே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை மேலும் குறைந்து இருக்கிறது. 2023 ஹோண்டா CB300F மாடலில் OBD-II A விதிகளுக்கு பொருந்தும் வகையிலான என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்த மாடலில் 293.52சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.13 ஹெச்.பி. பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News