பைக்

கிளாசிக் 350-க்கு போட்டி.. முற்றிலும் புது பைக் அறிமுகம் செய்யும் ஹோண்டா..

Published On 2023-11-16 10:43 GMT   |   Update On 2023-11-16 10:43 GMT
  • மிடில்வெயிட் பிரிவில் அதிக போட்டி நிலவி வருகிறது.
  • ஜெ சீரிஸ் என்ஜின் கொண்ட மாடல்களை அதிகப்படுத்துகிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது CB 350 ஹைனஸ் மாடலின் புதிய வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப ஆண்டுகளில் 350 முதல் 400 சிசி வரையிலான திறன் கொண்ட மாடல்கள் அடங்கிய மிடில்வெயிட் பிரிவில் அதிக போட்டி நிலவி வருகிறது.

அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஜெ சீரிஸ் என்ஜின் கொண்ட மாடல்கள் எண்ணிக்கையை பரவலாக அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் நீட்சியாகவே புல்லட் 350 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு தவிர ஹோண்டா நிறுவனமும் மிடில்வெயிட் பிரிவில் தனது கவனத்தை அதிகப்படுத்தி வருகிறது.

தற்போது ஹோண்டா நிறுவனம் சந்தையில் அதிக பிரபலமாக விளங்கும் கிளாசிக் 350 மாடலுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில் புதிய மாடலுக்கான டீசர்களையும் ஹோண்டா வெளியிட்டு உள்ளது. அதில் புதிய மாடல் டெல்ஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதில் உள்ள அலாய் வீல்கள் ஹோண்டா ஹைனஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. தற்போது ஹைனஸ் CB350 மாடல் DLX, DLX ப்ரோ, DLX ப்ரோ க்ரோம் மற்றும் லெகசி எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. 

Tags:    

Similar News