பைக்

சோதனையில் சிக்கிய ஹீரோ 300சிசி மோட்டார்சைக்கிள்

Published On 2022-08-10 08:56 GMT   |   Update On 2022-08-10 08:56 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • 300 சிசி பிரிவில் உருவாக்கப்படும் ஹீரோ மோட்டார்சைக்கிள் மாடல்கள் சோதனை செய்யப்படுகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏராளமான புது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அடங்கும். தற்போது பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்டிரீம் 200 என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் அதிக மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி இருக்கிறது. இவை எக்ஸ்டிரீம் 300 மற்றும் எக்ஸ்பல்ஸ் 300 பெயரில் விற்பனைக்கு வர உள்ளன. முதல் முறையாக புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 300 மற்றும் எக்ஸ்பல்ஸ் 300 மாடல்கள் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி உள்ளது.


Photo Courtesy: Gowtham Naidu

இந்த மாடல்கள் லே லடாக் பகுதியில் சோதனை செய்யப்படும் போது சிக்கியுள்ளன. எக்ஸ்பல்ஸ் 300 மாடல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். எக்ஸ்டிரீம் 300 மாடல் ஃபுல்லி-ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். இவற்றின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக 2020 வாக்கில் ஹீரோ நிறுவனம் டிரெலிஸ் ஃபிரேமில் வைக்கப்பட்ட 300சிசி என்ஜினை காட்சிப்படுத்தியது.

இந்த பிளாட்பார்ம் ஹீரோ 450RR டக்கர் ரேலி மோட்டார்சைக்கிள் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. சோதனை செய்யப்படும் மாடல் கிளட்ச் கவர், சிவப்பு நிற டிரெலிஸ் பிரேம், முன்புறம் ஸ்போக்டு வீல்கள், பெட்டல் டிஸ்க், ஸ்விங் ஆர்ம், க்ரோம் பினிஷன் செய்யப்பட்ட சைடு ஸ்டாண்டு உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

Tags:    

Similar News