பைக்

விரைவில் இந்தியா வரும் சூப்பர் ஸ்பிலெண்டர் 125 - அசத்தல் டீசர் வெளியீடு

Published On 2022-07-25 04:05 GMT   |   Update On 2022-07-25 04:05 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புது மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது.
  • இந்த மாடல் முழுக்க முழுக்க பிளாக் நிறம் கொண்டு இருக்கும் என தெரிகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சூப்பர் ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர்களை ஹீரோ மோட்டோகார்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி இந்த மாடல் ஆல்-பிலாக் ஃபினிஷ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே 100சிசி திறன் கொண்ட ஸ்பிலெண்டர் பிளஸ் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே ஆல் பிளாக் வெர்ஷனில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் பிளாக் நிற பேஸ் பெயிண்ட் ஹீரோ மற்றும் ஸ்பிலெண்டர் பிளஸ் லோகோக்களை பியூவல் டேன்க் மற்ரும் பக்கவாட்டு பேனல்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது.


காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர சூப்பர் ஸ்பிலெண்டர் 125 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் இந்த மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கும். இது 10.7 ஹெச்.பி. பவர் மற்றும் 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஹார்டுவேரை பொருத்தவரை டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஸ்ப்ரிங்குகள், 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடல் 240 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த மாடலில் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு உள்ளது. ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் 125 மாடலின் புது வெர்ஷன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News