பைக்

ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் பைக்.. வெளியீடு பற்றிய சூப்பர் அப்டேட்..!

Published On 2023-08-06 04:15 GMT   |   Update On 2023-08-06 04:15 GMT
  • சமீபத்தில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகின.
  • ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் தெரியவந்தது. இந்த முறை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தின் வெளியீடு பற்றிய தகவல் அம்பலமாகி இருக்கிறது.

முதல் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்து இருக்கிறார். அதன்படி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கான திட்டத்தின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சில ப்ரோடோடைப்களும் தயாராகி இருக்கின்றன. தற்போது பொறியாளர்கள் இந்த ப்ரோடோடைப்களை ஓட்டுகின்றனர். பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த பிளாட்பார்ம் சந்தையில் தனித்துவம் மிக்க இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த மாடலில் பெரிய பேட்டரி பேக் மற்றும் டாப் என்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரியவந்தது. இந்த கான்செப்ட்-ஐ கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ந்து வரும் பிரிவில் ராயல் என்பீல்டு பயணம் குறித்த விவரங்களை வழங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News