பைக்

விரைவில் இந்தியா வரும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்

Published On 2022-06-22 08:42 GMT   |   Update On 2022-06-22 08:42 GMT
  • டுகாட்டி நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது.
  • ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் வெளியாகியுள்ளது. புது மாடல் டுகாட்டி நிறுவனத்தின் ஐகான், ஐகான் டார்க், நைட்ஷிப்ட் மற்றும் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களின் வரிசையில் இணைகிறது.

புதிய ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலுக்கான டீசர் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. டீசரின் படி மோட்டார்சைக்கிளில் ஓரமாக பொருத்தப்பட்டு இருக்கும் சிங்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் பாட் மற்றும் பீக் ஸ்டைல் மட்கார்டு உள்ளிட்டவைகளை கொண்டு தான் இந்த மாடல் ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.


இந்திய சந்தையில் புது மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கு சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் ஸ்போர்ட் ப்ரோ, டார்க் ப்ரோ மற்றும் டிரிபியுட் ப்ரோ மாடல்களில் 1100 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், அரன்பன் மோட்டார்ட் மாடலில் 803சிசி யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையை போன்றே இந்திய சந்தையிலும் இதே யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News