பைக்

பி.எம்.டபிள்யூ. G 310 RR இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-07-16 07:23 GMT   |   Update On 2022-07-16 07:23 GMT
  • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக G 310 RR இருந்து வந்தது.
  • இந்தியாவில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் ஒரு வழியாக தனது சிறிய சூப்பர் ஸ்போர்ட் மாடல்- G 310 RR-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் விலை ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எணஅட் ஸ்டைல் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

ஸ்டைலிங்கை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட் கொண்டுள்ளன. இரு மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் பி.எம்.டபிள்யூ. தனது சூப்பர்ஸ்போர்ட் மாடலை ரெட் மற்றும் புளூ நிற ஆப்ஷன்களில் வழங்குகிறது.


பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

அம்சங்களை பொருத்தவரை முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், பியூவல் லெவல், என்ஜின் டெம்பரேச்சர் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News